சூடு பிடிக்கும் மெரினா பே சர்க்யூட்…!!! ஆரம்பமாக உள்ள சிங்கப்பூரின் F1 GP கார்பந்தயம் 2024 …!!!

சூடு பிடிக்கும் மெரினா பே சர்க்யூட்...!!! ஆரம்பமாக உள்ள சிங்கப்பூரின் F1 GP கார்பந்தயம் 2024 ...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் F1 GP 2024 கார் பந்தயம் செப்டம்பர் 20 முதல் தொடங்கி 22 வரை நடக்கவுள்ளது.

இதனால் மெரினா பே ஸ்ட்ரீட் சர்க்யூட்டைச் சுற்றி F1 சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ் 2024 இரவு நேர கார் பந்தயம் நடைபெறும்.

இதனால் மெரினா பே ஸ்ட்ரீட் சர்க்யூட் பகுதியே கலை கட்டி மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் பகுதியாக இருக்கும்.

செப்டம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை 4.94-கிலோமீட்டர் மெரினா பே ஸ்ட்ரீட் சர்க்யூட்டில் 62 சுற்றுகளுக்கு மேல் நடைபெறும்.

F1 பந்தயத்தை நேரில் காண வரும் ரசிகர்களால் அப்பகுதியில் உள்ள ஹோட்டல்களில் முன்பதிவானது சூடு பிடித்து வருகிறது.

இதனால் இந்த ஆண்டு அதன் வருவாய் 15 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், உள்ளூரிலிருந்து சற்று தொலைவில் உள்ள சில கடைகளில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறையலாம்.

F1 கார்பந்தயம் தொடர்பான சலுகைகள் மற்றும் செயல்பாடுகள் காரணமாக இந்த ஆண்டு அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும் என்று சில வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

அந்த வகையில் F1 கார்பந்தயத்திற்கான முன்பதிவு டிக்கெட்களும் சரசரவென விற்று தீர்ந்து வருகின்றன. இந்த ஆண்டு இரவு நேர கார்பந்தய நிகழ்ச்சி நிச்சயம் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow us on : click here ⬇️