கடன் தொல்லை சம்பவங்களில் ஈடுபட்ட நான்கு பேர் கைது…!!!

கடன் தொல்லை சம்பவங்களில் ஈடுபட்ட நான்கு பேர் கைது...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கடனை திரும்பக் கேட்டு துன்புறுத்தியதாக சந்தேகிக்கப்படும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடன் தொல்லையில் ஈடுபட்ட 4 சந்தேகநபர்கள் இரண்டு கடன் வழங்கல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் மீது இன்று (செப்டம்பர் 16) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட உள்ளது.

இவர்கள் நான்கு பேரும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள்.

போலீசார் செப்டம்பர் 14 மற்றும் செப்டம்பர் 15 அன்று நடந்த சம்பவம் குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் மரின் டிரைவ் மற்றும் பாசிர் ரிஸ் ஸ்ட்ரீட்டிலும் உள்ள இரண்டு வெவ்வேறு வீடுகளின் நுழைவாயிலுக்கு வெளியே கதவுகளுக்கு வர்ணம் பூசி எச்சரிக்கைக் குறிப்பை விட்டுச் சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது.

போலீசார் விசாரணை மற்றும் கண்காணிப்பு கேமரா உதவியுடன் செப்டம்பர் 15 அன்று 4 சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.

ஆரம்ப கட்ட விசாரணையில் அவர்கள் மற்ற கடன் வழங்கல் சம்பவங்களிலும் ஈடுபட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 5,000 வெள்ளி முதல் 50,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.

குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அதிகபட்சம் 6 கசையடிகள் விதிக்கப்படலாம்.

 

Follow us on : click here ⬇️