சிங்கப்பூரில் தடை செய்யப்படும் இரண்டாவது மூன் கேக்....!!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் Baker’s Cottage’s எனும் நிறுவனத்தின் Snow Skin Potato Mooncake தற்போது விற்பனையை தடை செய்துள்ளது.
அதில் அளவுக்கு அதிகமாக E coli பாக்டீரியா இருப்பதாக சிங்கப்பூர் உணவு ஆணையம் தெரிவித்துள்ளது.
E coli இயற்கையாகவே மனிதர்களின் குடலில் உள்ளது.
இது பொதுவாக உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை.
ஆனால் சில வகையான பாக்டீரியாக்கள் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும்.
மூன் கேக்குகளை வாங்கியவர்கள் அதை சாப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூரில் பாக்டீரியாவால் மீட்கப்பட்ட இரண்டாவது மூன்கேக் இதுவாகும்.
சமீபத்தில் தான் Four seasons Durian Pte Ltd நிறுவனத்தின் Mini D24 Durain Mooncake தடை செய்யப்பட்டது.
அதில் பாசிலஸ் செரியஸ் பாக்டீரியாக்கள் அதிகமாக இருப்பதாக சிங்கப்பூர் உணவு ஆணையம் தெரிவித்துள்ளது.
அந்த நுண்ணுயிரிகள் பொதுவாக சுற்றுச்சூழல் அமைப்புகளிலும் பூச்சிகள் மற்றும் பாலூட்டிகளின் குடல் பகுதிகளிலும் காணப்படும் பாக்டீரியா என கூறப்படுகிறது.
Follow us on : click here