ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவின் சில பகுதிகள் நீர் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி...!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவின் கூடுதல் பகுதிகள் நீச்சல் மற்றும் நீர் விளையாட்டுகளுக்காக திறக்கப்பட்டுள்ளன.
ஜூன் மாதம் 14ஆம் தேதி ஏற்பட்ட எண்ணெய் கசிவுக்குப் பிறகு கடற்கரைகள் சுத்தம் செய்யப்பட்டு தற்போது மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன.
ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் உள்ள பி மற்றும் சி பகுதிகள் பாதுகாப்பானவை என தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு D முதல் H வரையிலான பகுதிகளில் நீரின் தரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.
அந்த இடங்களில் மட்டும் தண்ணீர் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதனால் மறு அறிவிப்பு வெளியாகும் வரை அந்த பகுதிகளில் நீந்தவோ, நீர் விளையாட்டுகளில் ஈடுபடவோ வேண்டாம் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Follow us on : click here