சிங்கப்பூரில் நடைபெறும் “உலகின் பிரமண்டமான நிழ்ச்சி”

சிங்கப்பூரில் நடைபெறும் "உலகின் பிரமண்டமான நிழ்ச்சி"

இன்று(செப்டம்பர் 13) உலகின் மிகப்பெரிய ஒலி, ஒளி மற்றும் மல்டிமீடியா நிகழ்ச்சி சிங்கப்பூரில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சி முதன் முதலில் கன்னடாவில் ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும், சர்வதேச அளவில் அரங்கேறுவது இதுவே முதல் முறையாகும்.

மரினா பே சாண்ட்ஸ், பாய் ப்ரெண்ட் ஈவன்ட் ஸ்பேஸ் (Boyfront Event space ) என்ற இடத்தில் illumi என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.

அடுத்த வருடம் சீன புத்தாண்டு வரை பல நிகழ்வுகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் ஒரு பெரிய அளவிலான நகரும் உயிரோவியங்கள், அரண்மைக்குள் நடப்பதைப் போன்ற அனுபவத்தையும் பெறலாம்.

மேலும் 9 கருப்பொருள் பிரிவுகள் கண்ணைக் கவரும் அம்சங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

மக்கள் அனைத்து அம்சங்களையும் பாதுகாப்பாக ஈடுபடுவதற்காக ஏற்படுகளும் செய்யப்பட்டுள்ளன.

சிலைகளை தொடவும் அனுமதி வழங்கப்படும்.
மேலும் இந்த கண்காட்சி பணிகளுக்கு வழக்கத்தை விட குறைவான மின்சாரமே பயன்படுத்தப்பட்டதாக அமைப்பாளர்கள் கூறினர்.

இந்த கண்காட்சியில் உள்ள அனைத்து பொருட்களும் கைகளால் செய்யப்பட்டவை. அதற்காக ஐந்து வாரங்களா ஒரு குழு இடைவிடாது உழைத்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

Follow us on : click here ⬇️