சிங்கப்பூரில் Indian Embassy Letter எப்படி வாங்குவது?

சிங்கப்பூரில் Indian Embassy Letter எப்படி வாங்குவது?

சிங்கப்பூரை பொறுத்தவரை உங்களுடைய இந்தியா லைசென்ஸை சிங்கப்பூர் லைசென்ஸாக மாற்றுவதற்கு ஒரு சில சமயங்களில் இந்தியன் எம்பஸி லெட்டர் (Embassy Letter) தேவைப்படும்.

உங்களுடைய இந்தியா லைசென்ஸ் பழைய லைசென்ஸாக இருந்தாலும் அல்லது அதில் உள்ள உங்களுடைய முகவரியும் பாஸ்போர்ட்டில் உள்ள முகவரியும் வேறுபட்டு இருந்தாலும் அல்லது உங்களுடைய இந்தியா லைசென்ஸ் Demage – ஆக இருந்தாலும் நீங்கள் நிச்சயமாக இந்தியன் எம்பஸி சென்று கடிதம் வாங்கி வர வேண்டும்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் Blsindia.sg என்ற இணையதளத்திற்கு சென்று உங்களுடைய Appointment பதிவு செய்து கொள்ளுங்கள் அதில் குறிப்பிட்டு உள்ள தேதியில்


1)Passport (original)
2)Indian driving licence (original)
3)Work permit (original)
3)SG arrival card

மேலே குறிப்பிட்டுள்ள இந்த ஆவணங்களை எடுத்துச் சென்றால் அங்கு உங்களிடம் 60 டாலர்கள் கேட்பார்கள்.

 

அந்த தொகையை நீங்கள் செலுத்தி விட்டீர்கள் என்றால் அடுத்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு இந்தியன் எம்பஸி லெட்டர் கிடைத்துவிடும். இதன் மூலம் நீங்கள் எளிதாக உங்களுடைய இந்தியா லைசென்ஸை சிங்கப்பூர் லைசென்ஸ்-ஆக மாற்றிக் கொள்ளலாம்.