லோயாங் தரவு நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து...!!! தொடரும் தீயணைப்பு பணிகள்...!!!
சிங்கப்பூர்: லோயாங்கில் உள்ள டிஜிட்டல் ரியாலிட்டி தரவு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் கட்டிடத்தின் கட்டமைப்பு சேதமடையவில்லை என்று கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையம் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் ரியாலிட்டி என்பது தரவு மையங்களை இயக்கும் உலகளாவிய சொத்து சந்தை நிறுவனமாகும்.
இது சிங்கப்பூரில் மொத்தம் 3 தரவு மையங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் இரண்டு லோயாங்கிலும், ஒன்று ஜூரோங்கிலும் உள்ளன.
இந்த தீ விபத்துச் சம்பவம் லோயாங்கில் செப்டம்பர் 10 அன்று காலை ஏழே முக்கால் மணியளவில் நடந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படைக்குக் காலை 8 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் கட்டிடத்தில் இருந்து சுமார் 20 பேர் வெளியேற்றப்பட்டனர்.
இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
நிலையத்தின் இரண்டு பேட்டரி அறைகள், இரண்டு மின்சாதன அறைகள் மற்றும் சேமிப்பு அறைகள் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளன.
நான்கு மாடி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இது லித்தியம் அயன் பேட்டரிகளை வைத்திருந்தது.
தீயினை அமைப்பதற்காக சிவில் பாதுகாப்புப் படையின் 4 தீயணைப்பு வாகனங்கள் உட்பட நீர் ஜெட் பம்புகளும் பயன்படுத்தப்பட்டன.
எரிந்த பேட்டரிகளை குளிர்விப்பதற்காக நேற்று இரவு 9 மணியளவில் ஆளில்லா தீயணைப்பு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.
நிலையத்தின் உரிமையாளர் நடவடிக்கைகளை வழிநடத்துகிறார்.
சிங்கப்பூரின் குடிமைத் தற்காப்புப் படையும் கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையமும் தீயினை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவித்தன.
Follow us on : click here