“செல்லப் பிராணிகளுக்கான பராமரிப்பு பயிற்சி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்”- அமைச்சர் திரு.லீ

“செல்லப் பிராணிகளுக்கான பராமரிப்பு பயிற்சி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்”- அமைச்சர் திரு.லீ

சிங்கப்பூர்: செல்லப்பிராணிகள் நம் வீட்டில் ஒரு குடும்ப உறுப்பினர் போன்று இருந்து வருகிறது. செல்லப் பிராணிகள் மீதான மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவற்றின் நலனில் அக்கறை கொண்ட சிங்கப்பூர் அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

சம்பந்தப்பட்டவர்கள் முறையாக அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் என்று தேசிய வளர்ச்சித்துறை அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியுள்ளார்.

செல்லப்பிராணிகளை விற்கும் கடை உரிமையாளர்கள், வளர்ப்பவர்கள், கால்நடை மருத்துவமனை நடத்துவோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்று கூறுகிறது.

உதாரணமாக, செல்லப்பிராணி கடை ஊழியர்கள் அல்லது வளர்ப்பவர்கள் செல்லப்பிராணி பராமரிப்பு குறித்த முறையான பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் பயிற்சிகள் தேசிய பூங்காக் கழகத்தின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

செல்லப்பிராணி பயிற்சியாளர்கள் உட்பட விலங்குகளுடன் பணிபுரிபவர்கள் அவற்றின் நலனைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் திரு.லீ கூறினார்.

விலங்குகளை சித்திரவதை செய்தாலோ, அவற்றின் நலனை பாதுகாக்க தவறினாலோ விலங்குகள் மற்றும் பறவைகள் நலச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

செல்லப்பிராணிகள் தொடர்பான வணிகத்தில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் சுட்டுக் காட்டினார்.

செல்லப்பிராணி சேவை வழங்குவோருக்கு மேலும் நடைமுறைகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு அமைச்சர் லீ பாராளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

 

Follow us on : click here ⬇️