“தாய் மொழிகள் கற்பதில் மகிழ்ச்சியை உருவாக்குங்கள்”
சிங்கப்பூர்: தாய்மொழிகள் சிங்கப்பூரர்களை அவர்களின் பாரம்பரியம் மற்றும் நற்பண்புகளுடன் இணைக்கின்றன என்று ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் தெரிவித்துள்ளார்.
மலாய் மொழி மாதத்தின் தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றும் போது அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.
தாய்மொழி சிங்கப்பூரின் அடையாளம் மற்றும் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துவதாகக் கூறினார்.
பிராந்தியத்தில் வளர்ந்து வரும் வாய்ப்புகளைப் பிடிக்க மொழி உதவும் என்றார்.
இருமொழியால் அனைவருக்கும் நன்மை பயக்கும் என்றார் அதிபர் தர்மன்.
மொழி என்பது பள்ளியில் கற்பதும் கற்பிப்பதும் மட்டுமல்ல அவற்றை முறையாக பயன்படுத்துவதிலும் உள்ளது என்று கூறினார்
அன்றாட வாழ்வில் தாய்மொழியை உயிர்ப்புடன் வைத்திருப்பதன் முக்கியத்துவத்தையும் அதிபர் எடுத்துரைத்தார்.
மேலும் அவர் தாய் மொழிகளுடன் கூடிய பாடல்கள், திரைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கேம்கள் போன்று இயற்கையாக மாணவர்களை ஈர்க்கும் வகையில் கற்பித்தல் நுட்பங்களைப் பயன்படுத்த அவர் பரிந்துரைத்தார்.
Follow us on : click here