மொபைல் கார்டியன் செயலியை ரத்து செய்த கல்வி அமைச்சகம்…!!!

மொபைல் கார்டியன் செயலியை ரத்து செய்த கல்வி அமைச்சகம்...!!!

சிங்கப்பூர்:மாணவர்கள் கல்வி கற்றலுக்காக பயன்படுத்தி வந்த மொபைல் கார்டியன் செயலி உடனான ஒப்பந்தத்தை கல்வி அமைச்சகம் ரத்து செய்துள்ளது.

பிற வசதிகளை பயன்படுத்துவது குறித்து ஆராய்வதாக CNA கூறியது.

மொபைல் கார்டியன் செயலி இந்த ஆண்டில் இரண்டு முறை ஹேக் செய்யப்பட்டது.

கடந்த மாதம் 4 ஆம் தேதி (ஆகஸ்ட் 2024) 26 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 13,000 பயனர்கள் உலகளாவிய இணைய மீறலால் பாதிப்புக்குள்ளாயினர்.

ஊடுருவும் நபர்கள் மாணவர்களின் தனிப்பட்ட கற்றல் சாதனங்களான iPadகள் மற்றும் மடிக்கணினிகளில் உள்ள அனைத்து தரவுகளையும் அழித்தனர்.

தனிப்பட்ட கற்றல் சாதனங்களில் உள்ள பயன்பாடுகள்,சேமிக்கப்பட்ட தகவல்கள், வகுப்புக் குறிப்புகள், பயிற்சித் தாள்கள் போன்றவற்றை மாணவர்களால் அணுக முடியவில்லை.

அடுத்த நாள் (ஆகஸ்ட் 5) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களின் தனிப்பட்ட கற்றல் சாதனங்களில் இருந்து மொபைல் கார்டியன் செயலியை நீக்குவதாக கல்வி அமைச்சகம் அறிவித்தது.

ஆப்ஸ்,இணையதளங்கள் மற்றும் திரை நேரத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மாணவர்களின் சாதனப் பயன்பாட்டைப் பெற்றோரை நிர்வகிக்க ஆப்ஸ் அனுமதிக்கிறது.

எனவே ஆப்ஸ் இல்லாமலேயே பெற்றோர் எவ்வாறு கட்டுப்பாடுகளை அமைப்பது எப்படி என்பது குறித்த வழிகாட்டி கையேடு பெற்றோருக்கு வழங்கப்பட்டது.

இன்று (செப்டம்பர் 9) நாடாளுமன்றம் கூடும் போது மொபைல் கார்டியன் செயலியின் பிரச்சினை குறித்து விவாதிக்கப்படும் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Follow us on : click here 👇👇

Instagram id : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook id : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram id : https://t.me/tamilansg