ஒரு மணி நேரம் மட்டுமே இனி TikTok பயன்படுத்த முடியும்!

8 வயதுக்குக் கீழ்பட்ட இளையர்கள், இனிமேல் நாள்தோறும் ஒருமணி நேரத்துக்கு மட்டுமே TikTok கைப் பயன்படுத்த முடியும்.

இளையர்கள் அந்தச் சமூக வலைத்தளத்திலேயே மூழ்கிக் கிடப்பதைத் தடுக்க, TikTok அந்த அதிரடிக் கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.

[11:11 am, 03/03/2023] KING ARUN: வரும் வாரங்களில், அந்தக் கட்டுப்பாடு TikTok செயலிகளில் கொண்டுவரப்படும்.

“Setting”கிற்குச் சென்று அந்தக் கட்டுப்பாட்டை மாற்றமுடியும்.

இருப்பினும், மின்னிலக்கச் சாதனப் பயன்பாட்டைக் குறைத்து இளையர்களின் நலன்காக்க அந்த நடவடிக்கை உதவும் என நம்பப்படுகிறது.

புதிய கட்டுப்பாட்டின்கீழ், TikTokகைப் பயன்படுத்தத் தொடங்கி 60 நிமிடங்கள் முடிந்ததும் பயனீட்டாளார்கள் கடவுச்சொல்லைப் பதிவிடும்படி கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.

அப்போது, கூடுதல் நேரத்தைச் செலவிடுவதா இல்லையா என்பதை அவர்கள் யோசித்து முடிவுசெய்யலாம்.
[11:11 am, 03/03/2023] KING ARUN: TikTok முதலிய இதர சமூக வலைத்தளங்கள், இளையர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பல ஆண்டுகளாக நீடித்துவரும் விவாதங்களைக் கருத்தில்கொண்டு, இப்புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பிள்ளைகளின் TikTok கணக்கைப் பெற்றோர் அல்லது பாதுகாவலர் கணக்குடன் இணைக்கும் அம்சம், பிள்ளைகள் பதிவேற்றும் காணொளிகளைத் தணிக்கை செய்யும் அம்சம் முதலியவை குறித்த தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

Instagram, Snapchat ஆகிய சமூக வலைத்தளங்களும் அத்தகைய அம்சங்களை இதற்குமுன் அறிவித்திருந்தன.