சீரமைப்பு பணிகளுக்காக மூடப்படவுள்ள library@orchard நூலகம்..!!

சீரமைப்பு பணிகளுக்காக மூடப்படவுள்ள library@orchard நூலகம்..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஆர்ச்சர்ட் கேட்வே ஷாப்பிங் சென்டரில் உள்ள library@orchard நூலகம் சீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட உள்ளது.

2026 ஆம் ஆண்டு வரை கட்டம் கட்டமாக புதுப்பிக்கப்படுவதற்காக அக்டோபர் 28 முதல் மூடப்படும் என்று தேசிய நூலக வாரியம் (NLB) செப்டம்பர் 6 அன்று அறிவித்தது.

மேலும் அனைத்துப் பணிகளும் முடிந்ததும் 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NLB இன் நூலகங்களை புத்துயிர் பெறச் செய்யும் திட்டமானது பார்வையாளர்களுக்கு புதிய சேவைகள், இடங்கள் மற்றும் அனுபவங்களை வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த மறுசீரமைப்பு உள்ளது.

கற்றலுக்கான புதிய தொழில்நுட்பம் சார்ந்த இருவழி தொடர்பு அம்சங்கள் வளர்ச்சிப் பணிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.
நூலகத்தில் அமைந்திருக்கும்.

புதுப்பிக்கப்பட்ட நூலகத்தில் விசாலமான அறை,குழந்தைகளுக்கான புதிய பிரிவு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்கள் போன்றவை இடம்பெறவுள்ளது.