ICA அதிகாரிகளின் அதிரடி சோதனையில் சிக்கிய போலிப் பொருட்கள்…!!!

ICA அதிகாரிகளின் அதிரடி சோதனையில் சிக்கிய போலிப் பொருட்கள்...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூருக்குள் 3,700க்கும் மேற்பட்ட போலிப் பொருட்களை கடத்த மேற்கொள்ளப்பட்ட இரண்டு முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன.

அந்த இரண்டு முயற்சிகளும் வெவ்வேறு நாட்களில் கண்டுபிடிக்கப்பட்டன.

முதல் சம்பவம் துவாஸ் துறைமுகத்தில் இந்த ஆண்டு ஜூலை 3ம் தேதி நடந்தது.அப்போது அதிகாரிகள் சோதனை இட்டதில் போலி வாசனை திரவியங்கள் மற்றும் தோல் பராமரிப்பு பொருட்கள் என மொத்தம் 2,841 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இரண்டாவது சம்பவம் பாசிர் பஞ்சாங்கில் ஜூலை 25 அன்று நடந்தது.போலி வாசனை திரவியங்கள் என நம்பப்படும் 924 பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் அதிகாரசபை ஆணையம் நடத்திய சோதனையின் போது பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

சோதனையின் போது சரக்கு பெட்டகங்கள் மீது சந்தேகம் எழுந்ததால், அதிகாரிகள் கூடுதல் சோதனைக்கு உட்படுத்தினர்.

அப்போது சட்டவிரோதமாக கடத்தப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்த போலிப் பொருட்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டன.

இரண்டு சம்பவங்களும் விசாரணையில் உள்ளன.

 

Follow us on : click here ⬇️