2050 -ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை முற்றிலுமாகக் குறைக்க திட்டமிட்டுள்ள சிங்கப்பூர்....!!!
சிங்கப்பூரானது Singa Renewables மற்றும் Shell Eastern Trading ஆகிய இரு நிறுவனங்களுக்கும் இந்தோனேசியாவில் இருந்து குறைந்த கரியமில வாயுவை வெளியேற்றக் கூடிய மின்சக்தியை இறக்குமதி செய்ய நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளது.
எரிசக்தி சந்தை ஆணையம் வெளியிட்ட அறிக்கையின் படி இந்த இரு நிறுவனங்களும் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக தகுந்த திட்டங்களை கொடுத்துள்ளதால் இந்த இரு நிறுவனங்களுக்கும் 1.4 கிகாவட்ஸ் மின்சாரத்தை இறக்குமதி செய்யவும் அனுமதிகப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் 2050ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை முற்றிலுமாக குறைக்க இலக்கு வைத்துள்ளது.
அந்த இலக்கை அடைய உதவும் நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்றுவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
வியாழன் அன்று நடைபெற்ற இந்தோனேசியா சர்வதேச நிலைத்தன்மை மன்றத்தின் போது நிபந்தனை உரிமங்கள் மற்றும் நிபந்தனை ஒப்புதல்கள் வழங்கப்பட்டன
கடந்த ஆண்டு (2023) செப்டம்பரில், இந்தோனேசியாவில் இருந்து 2GW மின்சாரத்தை இறக்குமதி செய்ய ஐந்து நிறுவனங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.
அடுத்த கட்டமாக, ஐந்து நிறுவனங்களுக்கும் நிபந்தனையுடன் கூடிய உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் 2035-க்குள் அண்டை நாடுகளிடமிருந்து 6 ஜிகாவாட் குறைந்த கரிம ஆற்றலை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
இது 2021 இல் நிர்ணயிக்கப்பட்ட 4GW என்ற முந்தைய இலக்கை விட 50 சதவீதம் அதிகமாகும்.
2035 ஆம் ஆண்டளவில் நாட்டின் எரிசக்தித் தேவைகளில் மூன்றில் ஒரு பங்கு மின்சார இறக்குமதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த இறக்குமதி ஒப்பந்தங்களில் சிலவற்றின் கீழ் வணிக நடவடிக்கைகள் 2028 முதல் தொடங்கும் என்று எரிசக்தி சந்தை ஆணையம் (EMA) செப்டம்பர் 5 அன்று கூறியது.
எதிர்காலத்தில் எரிசக்தி தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
Follow us on : click here