சிங்கப்பூரில் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கூடுதல் ஆதரவு வழங்கப்படும்!

உலகம் மாற்றம் அடைவது போல சிங்கப்பூரின் கல்வி முறையும் அதற்கேற்ப மாற்றம் அடைந்து வருகிறது.

பலவீனமான மாணவர்களுக்கு அதிக உதவிகள் வழங்கப்படவிருக்கிறது.

கூடுதல் ஆதரவு கொடுக்கும் முன்னோடி திட்டம் இருக்கிறது.இத்திட்டம் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது.

முன்னோடி திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று கல்வி அமைச்சகம் கூறியது.UPLIFT Community Network எனும் கைதூக்கி விடும் சமூக கட்டமைப்பு விரிவுப்படுத்தப்படுவதாக தெரிவித்தது.

இந்த உதவி கொடுக்கும் கட்டமைப்பு தற்போது 12 வட்டாரங்களில் உள்ள சமூக சேவை அலுவலகங்களில் இருக்கிறது என்றும் கூறினார்.

மேலும் 12 வட்டாரங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறதாக கல்வி அமைச்சகம் தெரிவித்தது.

இதன் மூலம் சுமார் 1,300 மாணவர்களும், அவர்களுடைய குடும்பங்களும் பயன்பெறும் என்றும் கூறியது.