டைட்டானிக் கப்பலின் அரிய பொக்கிஷம் கண்டெடுப்பு…!!!

டைட்டானிக் கப்பலின் அரிய பொக்கிஷம் கண்டெடுப்பு...!!!

டைட்டானிக் கப்பலில் காணாமல் போன வெண்கலச் சிலை தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.

1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக பயணத்தை மேற்கொண்டிருந்தபோது ஒரு பெரிய பனிப்பாறையின் மீது மோதியதில் கப்பலில் இருந்த சுமார் 1,500 பேர் உயிரிழந்தனர்.

டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்பு ஓய்வறை தான் மிகவும் அழகான அறை என்று கூறப்பட்டது.

அந்த அறையின் மத்தியில் வைக்கப்பட்டிருந்தது தான் “வெர்சைல்ஸின் டயானா” வெண்கல சிலை.

இந்த அரிய பொக்கிஷம் தற்போது RMS titanic நிறுவனத்தால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

1985-ம் ஆண்டில் டைட்டானிக்கின் சிதைவுகளை ராபர் பல்லார்ட் கண்டுபிடித்தார்.

1986ம் ஆண்டு “வெர்சைல்ஸின் டயானா” என்ற வெண்கல சிலையை அவர் புகைப்படம் எடுத்திருந்தார்.

இந்நிலையில் டைட்டானிக் சிதைவுகளைத் தேடும் உரிமையை வைத்திருக்கும் RMS titanic, தற்போது நடத்திய ஆய்வில் அந்த சிலை கண்டுபிடிக்கப்பட்டது.

RMS titanic நிறுவனம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஆய்வை மேற்கொண்டது.

கிட்டத்தட்ட 112 ஆண்டுகளாக கடலுக்கு அடியில் இருந்த வெண்கல சிலையை கண்டுபிடித்துள்ளது.

2010 ஆம் ஆண்டு முதல் இடிபாடுகளை பார்வையிட்ட RMS titanic கப்பலின் முன் பகுதி புகைப்படத்தை வெளியிட்டது.

2022-ம் ஆண்டு ஆழ்கடல் வரைபட நிறுவனமான மெகலன் மற்றும் ஆவணப்பட தயாரிப்பு நிறுவனமான அட்லாண்டிக் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் போது கிடைத்தப் படங்களில் கப்பலின் முன் பகுதி பிடிமானங்கள் இருப்பது தெரிந்தது.

இந்த ஆண்டு 2024 இல் கப்பலின் முன் பகுதி புகைப்படத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது கப்பலைச் சுற்றியுள்ள 4.5 மீட்டர் நீளமான பிடிமானங்கள் அறுந்து விழுந்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏதோ ஒரு சமயத்தில் கீழே விழுந்து இருக்கலாம் என்று கூறியது.