வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு புதிய நிபந்தனை.
சிங்கப்பூர் நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த விரும்புவோர் அவர்களுடைய ஊழியர்களின் கல்விதகுதி பொய்யான தகவல்களா?நம்பத்தகுந்தவைகளா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த புதிய நடைமுறை செப்டம்பர் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வரும். முதலாளிகள் அவர்களுடைய விண்ணப்பதாரர்களின் பட்டப்படிப்பு கல்வி அல்லது அதற்கும் மேற்பட்ட கல்வி தகுதியை உறுதிப்படுத்தும் 3-ஆம் தரப்பு ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஊழியர்களைப் பணி அமர்த்துவதற்கு முன்பே அவர்களுடைய கல்வி தகுதியின் தகவல்கள் நம்பகத்தன்மை உடையதை உறுதி செய்ய வேண்டும்.
நிறுவனங்களுக்கு கடமை இருப்பதாக மனிதவள அமைச்சர் Tan See Leng கூறினார்.
இந்த கட்டாய நடைமுறை மூலம் சமர்ப்பிக்கப்படும் போலியான கல்வித் தகுதிச் சான்றிதழ்கள் சம்பவங்களை கையாள உதவும் என்றும் கூறினார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் Employment Pass இல் விண்ணப்பிக்கும் போது போலியான தகவல்களை வழங்கிய குற்றத்திற்காக அந்த நபருக்கு 7 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் அந்த போலியான தகவல்களை 2019-ஆம் ஆண்டு வழங்கினார்.அவருடைய விண்ணப்பத்திற்கு இதன் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்டது.