முதியவர்களுக்கு வீழ்ச்சி கண்டறியும் கருவி பொறுத்த நிதியுதவி…!!!

முதியவர்களுக்கு வீழ்ச்சி கண்டறியும் கருவி பொறுத்த நிதியுதவி...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மூத்தோர்கள் பயனடையும் வகையில் தங்கள் வீட்டில் கீழே விழும் எதிர்பாராத அசம்பாவிதங்களை தடுக்க வீழ்ச்சி கண்டறிதல் கருவிகளை பொருத்த நிதியுதவி கிடைக்க வாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புக்கிட் பாத்தோக்கில் தனியாக வசிக்கும் 36 முதியவர்கள் விரைவில் இந்த வசதிகளை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் முரளிப்பிள்ளை இன்று இந்தத் தகவலை வெளியிட்டார்.

திரு.முரளி அவர்கள் நெருக்கடியான காலங்களில் முதியவர்கள் மருத்துவ உதவியை நாடுவதை உறுதி செய்ய இத்தகைய கருவிகள் அவசியம் தேவை என்று கூறினார்.

தேசிய வளர்ச்சிக் குழுவின் அமைச்சர் டெஸ்மண்ட் லீ,ஹெச்டிபி அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் முதியவர்களுக்கான உதவி தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் திட்டங்கள் குறித்து பேசினார்.

சிங்கப்பூர் அதிக முதியவர்களைக் கொண்ட சமூகமாக உள்ளது. எனவே அவர்கள் சுதந்திரமாக வாழ உதவ வேண்டிய அவசியம் உள்ளது என்றார்.

ஏப்ரல் மாதத்தில் சாதனம் பொருத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அப்போது சிலர் மட்டுமே அதை பொருத்த முன்வந்தனர்.

ஏனெனில் அந்தச் சாதனத்தின் விலை உயர்வு முக்கிய காரணமாக இருந்தது.

சாதனம் பொருத்துவதற்கு மட்டும் 120 வெள்ளி வரை செலவாகும்.

மேலும் பராமரிப்பிற்கு 35 வெள்ளி வரை செலவாகும்.

எனவே சிலர் விலை காரணமாக அச்சாதனத்தை பொறுத்த விரும்பவில்லை.

இதனை கருத்தில் கொண்டு புக்கிட் பாத்தோக் அறக்கட்டளைகள் முதியோர் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவுவதற்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 45,000 வெள்ளியை ஒதுக்க திட்டமிட்டுள்ளது.

கருவி நிறுவல் கட்டணம் மற்றும் மாதாந்திர கட்டணம் செலுத்த தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 500 வெள்ளி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தால் பல முதியவர்கள் பயனடைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

Follow us on : click here ⬇️