சிங்கப்பூரில் வேலை தேடுபவர்களை ஏமாற்றும் புதிய கும்பல்!!

சிங்கப்பூரில் வேலை தேடுபவர்களை ஏமாற்றும் புதிய கும்பல்!!

தமிழ்நாட்டில், வெளிநாடு செல்பவர்களை குறிவைத்து பல மோசடி கும்பல்கள் செயல்பட்டு வருகிறது.இதில் பல பேர், பல லட்சம் ரூபாய்களை பறிக்கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதில் இப்பொழுது புதுவகை ஏமாற்று உத்திகள் நடைப்பெறுகிறது.
இதன்படி நீங்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக onlineமூலம் பதிவு செய்யும்பொழுது, அதில் உங்கள் தொலைப்பேசி எண்ணை கொடுத்திருப்பீர்கள். அந்த தொலைப்பேசி எண்ணை எடுத்து உங்களை தொடர்புக் கொள்வார்கள். உங்களிடம் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு உள்ளதாகவும் அதற்காக நீங்கள் எந்தவித தொகையும் செலுத்த வேண்டியது இல்லை என்றும் சொல்வார்கள்.

பிறகு உங்களுக்கு online மூலம் Interview என்று சொல்லி உங்களை பேச வைப்பார்கள் அவர்கள் வெளிநாட்டில் இருந்து பேசுவது போல் பேசுவார்கள்.

அதன் பிறகு நீங்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டீர்கள் என்றும் நீங்கள் மெடிக்கல் மட்டும் போட்டால் போதும் என்றும் சொல்வார்கள்.

ஆனால் மெடிக்கல் டெஸ்ட் அவர்கள் சொல்லும் இடத்தில் மட்டுமே செய்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். அதற்காக ஒரு நபருக்கு அவர்கள் வாங்கும் கட்டணம் 5000 முதல் 7000 வரை இருக்கும்.

ஆனால் உண்மையிலேயே நீங்கள் வெளிநாடு செல்வதற்காக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டுமென்றால் அதற்கான கட்டணம் 2000-த்தில் இருந்து 3000-க்குள் தான் வரும்.

இவர்கள் 5000 முதல் 7000 வரை வாங்கிக் கொண்டு நீங்கள் மருத்துவ ரீதியாகவும் தேர்ச்சி பெற்று விட்டீர்கள் என்றும் சொல்வார்கள்.

அதன் பிறகு உங்களுக்கு சிங்கப்பூரில் இயங்கிக் கொண்டிருக்கும் பிரபலமான ஒரு சில கம்பெனிகளின் பெயரில் Offer Letter தருவார்கள்.

அந்த கடிதத்தில் இன்னும் நான்கு மாதத்தில் உங்களை தொடர்புக் கொள்வதாகவும் குறிப்பிட்டு இருக்கும்.

ஆனால் அந்த கடிதமும் போலியானது நான்கு மாதத்திற்கு பிறகு அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியாது. அவர்களின் குறிக்கோள் மருத்துவ பரிசோதனை செய்வதாக கூறி உங்களிடம் இருந்து பணம் பறிப்பதே ஆகும்.

தயவுசெய்து இதுபோன்று இலவச வேலை வாய்ப்பு வாங்கித் தருவதாக சொல்பவர்களிடம் சற்று கவனமாக இருங்கள்.

உங்களுக்கு வெளிநாட்டில் வேலை வேண்டும் என்றால் அரசு அனுமதி பெற்ற வேலை வாய்ப்பு நிறுவனங்களை அணுகுவது மிகவும் சிறந்தது.

முன்பணம் இல்லாமல் ஏமாற்றாமல் வெளிநாட்டு வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் நமது Sgtamilan.com இணைய பக்கத்தில் இணைந்து கொள்ளுங்கள்.இதில் நாம் தினமும் சிங்கப்பூர் வேலை வாய்ப்பு தகவல் மட்டுமில்லாமல் பல வெளிநாட்டு வேலை வாய்ப்பு தகவல்களையும் பதிவேற்றம் செய்து வருகிறோம்.

Follow us on : click here ⬇️