சிங்கப்பூரில் தேசிய சேவையாளர்கள் ஆயுதப் படையில் வேலை செய்து கொண்டு பயிலும் திட்டத்தில் மேலும் ஒரு படிப்பைச் சேர்த்துள்ளது.
இதற்குமுன் தேசிய சேவையாளர்களுக்கு 5 பட்டப் படிப்பு இருக்கிறது.
தற்போது, இயந்திர தொழில்நுட்ப பொறியியல் பட்ட படிப்பும் சேர்க்கப்பட்டுள்ளது.
தேசிய சேவையோடு படிப்பையும் தொடரும் ஆயுதப் படையின் திட்டத்தில் ராணுவ, ஆகாய படைத் தொழில்நுட்பவர்களுக்கான பட்ட படிப்புக் கல்வி திட்டங்களும் இதில் அடங்கும்.
இத்திட்டம் 5 ஆண்டாக நடப்பில் இருக்கிறது.
தேசிய சேவையாளர்கள் சேவை செய்து கொண்டே அவர்கள் பகுதி நேரமாகவும் படிக்கலாம் என்பது இதன் நோக்கம்.
அவர்கள் படிப்பைக் கைவிடாமலும், சேவையையும், படிப்பையும் சமநிலையில் பார்க்க முடிவதாக சிலர் கூறினர்.
புதிய பட்டப் படிப்பு சேர்ப்பு,செப்டம்பர் மாதம் சேரும் தேசிய சேவையாளர்களுக்கு இது பொருந்தும்.
சேவை செய்து கொண்டே படிக்கும் திட்டத்தில் பதிவோர்கள் முழு நேர தேசிய சேவைக்குப் பின், அவர்கள் முழு நேர ஆயுதப்படை வீரராகவும் பணியாற்ற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.