பாரா ஒலிம்பிக் 2024 : 50 மீட்டர் Backstroke நீச்சல் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய சிங்கப்பூர் வீராங்கனை!!
பாரா ஒலிம்பிக் போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை Yip Pin Xiu 50m Backstroke நீச்சல் போட்டியின் இறுதி சுற்றுக்கு தகுதிப்பெற்றுள்ளார்.
S2 பிரிவுக்கான தகுதி சுற்று ஆகஸ்ட் 31-ஆம் தேதி(இன்று) நடைபெற்றது.
இப்போட்டியில் அவர் முதலிடத்தில் வந்தார்.அவர் எடுத்துக்கொண்ட நேரம் 1 நிமிடம் 05.06 விநாடிகள்.
இரண்டு தகுதிச்சுற்றுகளில் 8 இடங்களைப் பிடித்த நீச்சல் வீரர்கள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவார்கள்.
இன்று பின்னிரவு சுமார் 1.50 மணியளவில் இறுதி சுற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நேற்று(ஆகஸ்ட் 30) நடைபெற்ற பெண்களுக்கான 100 மீட்டர் Backstroke நீச்சல் S2 பிரிவில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow us on : click here