சிங்கப்பூர் காவல்துறையின் அதிரடி…!!! சோதனையில் சிக்கிய 346 பேரிடம் விசாரணை…!!!

சிங்கப்பூர் காவல்துறையின் அதிரடி...!!! சோதனையில் சிக்கிய 346 பேரிடம் விசாரணை...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் போலீஸ் நிலப்பிரிவு ஆகியன இணைந்து இம்மாதம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரை சோதனைகள் நடத்தி வந்தது.

இதில் மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 346 பேரிடம் விசாரணை நடத்தியது.

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களில் 231 பேர் ஆண்கள் மற்றும் 115 பேர் பெண்கள் என தெரியவந்துள்ளது.

அவர்கள் அனைவரும் 16 முதல் 76 வயது வயதுக்குட்பட்டவர்கள்.

இது குறித்து சிங்கப்பூர் காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில் விசாரிக்கப்படும் 346 பேரும் 1,300க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுவதாக கூறியது.

பாதிக்கப்பட்டவர்கள் 13.8 மில்லியன் வெள்ளிக்கு மேல் இழந்ததாக நம்பப்படுகிறது.

மோசடி குற்றத்திற்காக அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.