Cordlife தொப்புள் கொடி ரத்த வங்கி மீண்டும் திறப்பு...!!!
சிங்கப்பூர்: Cordlife தொப்புள் கொடி ரத்த வங்கி சில நிபந்தனைகளுடன் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி, Cordlife வங்கி அடுத்த 6 மாதங்களுக்கு புதிய தொப்புள் கொடி ரத்த மாதிரிகளை சேகரிக்கவும்,பரிசோதிக்கவும் கூடாது என அமைச்சகம் தடை விதித்தது.
தொப்புள் கொடியின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்ட 7 கொள்கலன்கள் அனுமதிக்கப்பட்ட வெப்பநிலையை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
இதன் விளைவாக, சுமார் 2,150 வாடிக்கையாளர்களுக்கு சொந்தமான தொப்புள் கொடியின் இரத்த தொகுப்புகள் சேதமடைந்தன.
மேலும் இதில் 17,000 வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
இந்த விவகாரத்தில் முன்னாள் இயக்குனர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனால் Cordlife அனைத்துலக ரத்த வங்கியின் அங்கீகாரத்தை இழந்தது.
Cordlife வாடிக்கையாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக மாதத்துக்கு 30க்கும் மேற்பட்ட தொப்புள் கொடி ரத்தத் தொகுப்புகளைச் சேகரிக்கவோ சேமித்துவைக்கவோ முடியாது.
இந்த நிபந்தனைகள் அடுத்த மாதம் (செப்டம்பர் 2024) 15 முதல் 2025 ஜனவரி 13 வரை நடப்பில் இருக்கும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Follow us on : click here