ஹேமா அறிக்கையில் வெளிவந்த பாலியல் பூகம்பம்…!!! சிக்கும் முக்கிய நடிகர்களின் பெயர்கள்…!!!

ஹேமா அறிக்கையில் வெளிவந்த பாலியல் பூகம்பம்...!!! சிக்கும் முக்கிய நடிகர்களின் பெயர்கள்...!!!

கேரள திரையுலகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் குறித்த புகார்கள் தொடர்ந்து வெளிவர தொடங்கியுள்ளதால் கேரள திரையுலகமே அதிர்ந்து போய் உள்ளது. இதில் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் தொடங்கி பல முக்கிய நடிகர்கள்,பிரபல இயக்குனர்கள் பெயர்கள் அடிபட்டு வருகின்றது.

கடந்த 2017ல் நடிகர் திலீப் அனுப்பிய 7 பேர் கொண்ட கும்பல் நடிகை பாவனாவை காருக்குள் வைத்து பாலியல் தொல்லை கொடுத்து அதை வீடியோவாக எடுத்து வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்திற்கு பிறகு பாவனா ஒரு சிங்கப் பெண்ணாக முன் வந்து தனக்கு நடந்த கொடுமைகளுக்கு எதிராக போராடினார். அவருக்கு துணையாக தமிழ் திரைப்படமான பூ மற்றும் தங்கலான் படத்தில் நடித்த நடிகை பார்வதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட நடிகைகள் WCC என்ற ஒரு கமிட்டியை உருவாக்கி இந்த வழக்கில் பாவனாவிற்கு ஆதரவாக அரசுக்கு அதிக நெருக்கத்தை கொடுத்தனர். அதன் பிறகு திலீப் கைதானார்.

அதன் பிறகு கேரள அரசு இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு ஒரு கமிட்டியை உருவாக்க நினைத்தது. இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் தனக்கு நேர்ந்த கொடுமைகளை பகிரலாம் என்று கூறியது.

அதனால் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு கமிட்டி ஆரம்பிக்கப்பட்டது. இந்த கமிட்டியில் பழம்பெறும் நடிகையான சாரதா, ஓய்வு பெற்ற IAS அதிகாரி மன்சலா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் 60க்கும் மேற்பட்ட நடிகைகள், ஒப்பனை கலைஞர்கள், முக்கிய நடிகர்களிடம் விசாரணை நடத்தி அதன் மூலம் வாக்குமூலமும் பெறப்பட்டது.

2019-ல் ஹேமா கமிட்டி அறிக்கையை கேரள முதல்வராக இருந்த பினராயி விஜயனிடம்
ஒப்படைத்தது.அதன் பிறகு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தகவல் உரிமை பெறும் ஆணையம்(RTI)தலையிட்ட பிறகு ஹேமா அறிக்கைகள் வெளியிடப்பட்டது. இதில் சினிமா துறையில் பட வாய்ப்பிற்கு பெண்களை தவறாக அழைப்பது உண்மை என்று கூறியது.இது கேரளாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் இயக்குனர்கள் மற்றும் பல முக்கிய நடிகர்களின் பெயர்கள் அடிபட்டது. அதில் குறிப்பாக நடிகர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொல்லம் தொகுதி MLA முகேஷ் மீது 16 வயது ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் மற்றும் தாயாரிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் வந்தது. ஆனால் அதை முகேஷ் மறுத்தார். பிறகு அவர் கேரளா ஃபிலிம் வாடி பேனலிலிருந்து நீக்கப்பட்டார்.

அதன் பிறகு பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா இயக்குனர் ரஞ்சித் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக கூறியுள்ளார். அவர் பலேரி மாணிக்கம் என்ற படம் குறித்து பேசுவதற்காக தன்னை அவரது வீட்டிற்கு அழைத்தார் அங்கு சென்றபோது அவர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார் அதற்கு நான் ஒத்துக்கொள்ளவில்லை என்பதால் தனக்கு பட வாய்ப்பு தர மறுத்தார் என்று கூறியுள்ளார். இதன் பிறகு அவர் கேரளா ஃபிலிம் அகாடமி தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

அம்மா கமிட்டியின் பொதுச் செயலாளராக இருந்த நடிகர் சித்திக் மீது நடிகை ரேவதி சம்மந்த் பாலியல் புகார் அளித்தார்.தற்போது கொச்சிகாவல் துறை அவர் மீது ஜாமின் பெற முடியாத வகையில் வழக்கு பதிவு செய்துள்ளது.

இதேபோல் கடந்த 2008இல் விவின் பிரபாகர் இயக்கத்தில் உருவான ஒன் வே டிக்கெட் என்ற திரைப்படத்தில் நடிகை பிருத்திவிராஜ் பாமா உள்ளிட்டோர் நடித்தனர். இதில் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் நடித்த 16 வயது சிறுமி மற்றும் அவரது தாயாரை கேமராமேன் உள்ளிட்ட சில தொழில்நுட்ப கலைஞர்கள் அவர்களை இரண்டு வாரம் சிறையில் அடைத்து வைத்து பாலியல் கொடுமை செய்தனர் என்பதை நடிகை ஒருவர் பேட்டியில் கூறிய செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் பிறகு கேரள நடிகர் சங்கத்தின் அம்மா கமிட்டியின் தலைவரான மோகன்லால் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். அதன் பிறகு நிர்வாக குழுவும் கலைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஹேமா அறிக்கை வெளிவந்த போதும் மோகன்லால் இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தார். மோகன்லால் இது குறித்து பிரபல நடிகரான மம்முட்டி இடம் பேசியதாகவும் அவர்தான் பதிவிலிருந்து விலக ஆலோசனை கூறியதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

கேரள திரையுலகில் நடிகைகளுக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து சூப்பர் ஸ்டார் நடிகர்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருக்கு தெரியும் என்றும் ஆனால் அவர்களுக்கு இது குறித்து போராடும் தைரியம் இல்லை என்று நடிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

மோகன்லால் ராஜினாமா செய்ததை அடுத்து அம்மா அறிக்கை சார்பில் வெளியிட்ட தகவலில் இரண்டு மாதங்களுக்குள் பொதுக்குழுகூடி புதிய நிர்வாகக் குழு தேர்வு செய்யப்படும் என்று கூறியது.

இதன் பிறகு கேரளாவில் இளம் நடிகர்கள் சினிமாவை வழிநடத்த வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.அம்மா அறிக்கையில் பல முக்கிய நடிகர்கள் பெயர்கள் அடிபட்டாலும் இப்போது வரை ரஞ்சித், சித்திக் உள்ளிட்டோர் மட்டுமே கைதாகி உள்ளனர். பெண்களின் பாதுகாப்பு முக்கியம் என்றும் இது போன்ற மேலும் சில காம மிருகங்களின் பெயர்கள் வெளிவந்து அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்பது பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

 

Follow us on : click here ⬇️