சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டவர்களும், நிரந்தரவாசிகளும் போதைப்பொருளை பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக சோதனைக் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது 10 நிமிடங்களுக்குள் போதைப் பொருள் உட்கொண்டு உள்ளார்களா என்பதை கண்டறிந்து விடும்.
அதனைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை துணை அமைச்சர் Muhammad Faishal Ibrahim கூறினார்.
குடிநுழைவு சோதனைச் சாவடிகளில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு திரும்பும் பயணிகளிடமிருந்து உமிழ்நீர் பெறப்படும்.
பெறப்பட்ட உமிழ்நீரை பரிசோதனை செய்யப்படும். அதன்பின்,அவர்கள் போதைப்பொருள் உட்கொண்டுள்ளார்கள் என்று சோதனை முடிவு வந்தால் விசாரணை நடத்தப்படும்.
தற்போது வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடமிருந்து சிறுநீர் சோதனை மூலம் போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கிறார்களா என்பதை உறுதி செய்கிறது.
போதைப்பொருள் புழக்கம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே அதிகரிக்க புதிய நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டது.