ஜப்பானை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி!!

ஜப்பானை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி!!

மிக சக்திவாய்ந்த ஷான்ஷன் சூறாவளி ஜப்பானை ஆகஸ்ட் 29-ஆம் தேதி(இன்று) தாக்கியது.பலத்த காற்று வீசியதால் வீடுகளின் ஜன்னல்கள் நொறுங்கியது. மேலும் வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அதே நேரத்தில் பெய்த மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜப்பானின் மிக சக்தி வாய்ந்த சூறாவளி மணிக்கு 252 கிலோமீட்டர்(157 மைல்) வேகத்தில் வீசியது.

ஜப்பானின் தெற்கு தீவான கியூசாவில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

கியூசாவில் காலை 8.00 மணியளவில் கரையைக் கடந்தது.

சக்திவாய்ந்த சூறாவளி ஜப்பானை தாக்குவதற்கு முன்னதாகவே மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த சக்தி வாய்ந்த சூறாவளியால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

கடலோர நகரமான மியாசாகியில் இதுவரை 26 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பலத்த காற்று வீசியதால் கியூசோ தீவில் உள்ள 66, 000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

சூறாவளி கரையைக் கடந்தாலும் உயர்மட்ட எச்சரிக்கையை ஜப்பான் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

கியூசோ தீவில் 24 மணி நேரத்திற்குள் 60 செ.மீ வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us on : click here ⬇️