ஜப்பானில் விடுக்கப்பட்ட புயல் எச்சரிக்கை காரணமாக SIA விமானச் சேவைகள் ரத்து!!
சிங்கப்பூர்:சிங்கப்பூர் மற்றும் ஜப்பானின் ஒசாகா நகருக்கும் இடையேயான சில சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜப்பானில் ஷான்ஷான் சூறாவளியால் ஏற்பட்ட வானிலை காரணமாக நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான நிறுவனம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு விமானம் ரத்து செய்யப்பட்டது குறித்த தகவல் தெரிவிக்கப்படும் என்று நிறுவனம் கூறியது.
பயணிகள் மாற்று விமானச் சேவைகளை பெறலாம் அல்லது விமான டிக்கெட்டுகளுக்கு பணம் திரும்பப் பெறலாம் என தெரிவித்தது.
டைஃபூன் எண். 10 என வானிலை அதிகாரிகளால் குறிப்பிடப்படும் ஷான்ஷான், வியாழன் அன்று தெற்கு கியூஷுவில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இது மிகவும் வலுவான புயலாக இருக்கும் வேளையில் ஜப்பானின் சில பகுதிகளில் கனமழை மற்றும் நிலச்சரிவை ஏற்படுத்தக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.
எனவே அப்பகுதியில் இருக்கும் குடியிருப்பாளர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேறு இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.
Follow us on : click here