சிங்கப்பூரில் இரண்டு வெளிநாட்டினர் கைது!!
துவாஸ் View Square – இல் சிங்கப்பூர் சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது இரண்டு வங்கதேச ஆண்கள் ஆகஸ்ட் 24-ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசாரணையின் போது 2071 அட்டைப் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Gst உட்பட சிகரெட்டுகளுக்கான மொத்த கலால் வரி சுமார் $292712 வெள்ளி என்று கூறப்படுகிறது.
சிங்கப்பூர் சுங்கத்துறை ஆகஸ்ட் 28 (இன்று) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
மேலும் அதற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் கைது செய்யப்பட்ட இருவரும் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை சேகரித்து மீண்டும் பேக் செய்யும் வேலையை செய்து வந்ததாக கருதப்படுகிறது.
வரி செலுத்தப்படாத பொருட்களை வாங்குவது, விற்பனை செய்வது, சேகரித்து வைப்பது,டெலிவரி செய்வது, அல்லது அதைப் பயன்படுத்துவது போன்ற குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் ஆறு ஆண்டுகள் வரைச் சிறைத்தண்டனை விதிக்கப்படலம்.அல்லது வரி மற்றும் வரி ஏய்ப்பு தொகையை விட 40 மடங்கு அபராதம் விதிக்கப்படலாம்.
Follow us on : click here
Instagram id : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook id : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram id : https://t.me/tamilansg