Latest Singapore News

சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரிகள் போல் ஆள் மாறாட்டம் செய்து வரும் மோசடி கும்பல்!

சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரிகள் போல் ஆள் மாறாட்டம் செய்யும் மோசடி கும்பல்களைப் பற்றி எச்சரித்துள்ளது.

அவர்கள் காவல்துறை அதிகாரிகள் போல் ஆள் மாறாட்டம் செய்து மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் முதல் இவர்களிடம் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த தொகை சுமார் 1.9 மில்லியன் வெள்ளி இழந்துள்ளதாக தெரிவித்தது.

இவர்கள் அரசாங்க அதிகாரிகள் போல் ஆள் மாறாட்டம் செய்து மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக காவல்துறை அதிகாரிகள் போல் ஆள் மாறாட்டம் மோசடி செய்து வருவதாக காவல்துறை தெரிவித்தது.

இது போன்ற மோசடி செயல்கள் மீண்டும் நடப்பதாக காவல்துறை எச்சரித்தது.

இவர்கள் எப்படி மோசடி செய்வார்கள் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

அதாவது, மோசடிகாரர் வங்கி அதிகாரி போல் ஆள் மாறாட்டம் செய்து பொது மக்களின் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வர்.

அதன்பின் அவர்களின் வங்கி கணக்கில் பிரச்சனை இருப்பதாக கூறுவார்.

பிறகு, காவல்துறை அதிகாரி போல் ஆள் மாறாட்டம் செய்யும் மற்றொரு மோசடிகாரருடன் தொலைபேசி இணைக்கப்படும்.

விசாரணை என்று கூறி அவர்களுடன் இணைப்பார்கள்.

அதன்பின்,அவர்களுடைய வங்கி கணக்கில் உள்ள பிரச்சனை காரணமாக அதில் இருக்கும் பணத்தை இன்னொரு வங்கி கணக்கிற்கு மாற்ற சொல்லுவார்கள்.

அதன்பின் பாதிக்கப்பட்டவர்கள் வங்கிக்கு தொடர்பு கொள்வார்கள். அதன் பின் தான் அவர்களுக்கு தெரியும். அவர்கள் மோசடிகாரர்களிடம் ஏமாந்து விட்டார்கள் என்பதே.

வங்கி அதிகாரிகள் தொலைபேசி மூலம் அழைத்து வங்கி கணக்குகளைப் பற்றிக் கேட்க மாட்டார்கள் என்றும் காவல்துறை குறிப்பிட்டது.

பொது மக்கள் இது போன்ற அழைப்புகள் வந்தால் அதனைத் தவிர்க்கும்படி காவல்துறை கேட்டுக் கொண்டது.