நாயை அடித்து சித்திரவதை செய்த பணிப்பெண் மீது குற்றச்சாட்டு…!!!

நாயை அடித்து சித்திரவதை செய்த பணிப்பெண் மீது குற்றச்சாட்டு...!!!

சிங்கப்பூர்: நாயை சித்திரவதை செய்து அடுக்குமாடி கட்டிடத்தின் வேலியில் கட்டி வைத்த பெண்ணுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி பெர்ன்வேல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வேலியில் பூடில் வகை நாயை கயிற்றில் கட்டி தொங்க விட்டார்.

அதே நாளில் நாய் இறந்ததாக கூறப்படுகிறது.

மியான்மரைச் சேர்ந்த ஜுன்னி லால் ஆன் புயீ (25) என்பவர் மீது விலங்குகளை துன்புறுத்தியதாக நான்கு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவர் நாயை கயிற்றில் தொங்கவிடுவதற்கு முன்பு கொடூரமாக அடித்ததாகக் கூறப்படுகிறது.

இது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

காணொளி மூலம் நீதிமன்றத்தில் ஆஜரான பணிப்பெண், நாயை துன்புறுத்தியதாக கூறப்படும் மூன்று குற்றச்சாட்டுகளில் குற்றத்தை ஒப்புக் கொள்வதாக கூறினார்.

ஆனால் நாயை மாடியில் கட்டி வைத்ததாக எழுந்த குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.

அந்த நாயை மாடத்தில் தொங்க விடும்படி தனது முதலாளி தான் தன்னிடம் கூறியதாக தெரிவித்தார்.

இந்த வழக்கு அடுத்த மாதம் 5ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

நாயை துன்புறுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 18 மாதங்கள் வரை சிறைத்தண்டனை, 15,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.