KK சிறார் மற்றும் பெண்கள் மருத்துவமனை குறித்து அவதூறு பரப்பியவர்களுக்கு அபராதம்…!!!

KK சிறார் மற்றும் பெண்கள் மருத்துவமனை குறித்து அவதூறு பரப்பியவர்களுக்கு அபராதம்...!!!

சிங்கப்பூர்: KK பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையை அவதூறு செய்ததற்காக Wake Up Singapore செய்தித்தளத்தின் நிறுவனர் மற்றும் ஒரு பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மியான்மரைச் சேர்ந்த பெண் ஒருவர் பிப்ரவரி 28, 2022 அன்று KK சிறார் மற்றும் பெண்கள் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக சென்றார்.

அப்போது அந்தப் பெண் கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது.

அவர் கோவிட்-19 தொற்று மற்றும் வயிற்று வலிக்கு சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

குணமடைந்த பிறகு, ஜூலை மாதம் அவர் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

இந்த நிலையில் அந்தப் பெண், KK பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் தனக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக Wake Up Singapore தளத்திற்கு பொய்யான தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

Wake Up Singapore நிறுவனர் அரிஃபின்
இச்சம்பவம் குறித்து டாக்டரிடம் விவரம் கேட்டபோது அப்பெண் பதிலுக்காக காத்திருக்காமல் அவர் அனுப்பிய தவறான செய்தியை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்தச் செய்தியானது மற்ற ஊடகங்களிலும் வெளியானதாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் நடந்த சம்பவம் குறித்து KK மகளிர் மற்றும் சிறார் மருத்துவமனை விசாரணை நடத்தியது.

அந்தப் பெண்ணின் கதைக்கும் உண்மையில் நடந்ததற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதை மருத்துவமனை கண்டறிந்தது.

இதனால் KK சிறார் மற்றும் பெண்கள் மருத்துவமனை சம்பந்தப்பட்ட பெண் மீதும் Wake Up Singapore நிறுவனர் மீதும் பொய் தகவல் பரப்பியதாக அவதூறு வழக்கை தொடர்ந்தது.

அப்பெண் நீதிமன்றத்தில் தனக்கு சலிப்பு ஏற்பட்டதாலும், ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியதால் வேண்டுமென்றே தவறான தகவல்களை அனுப்பியதாக குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதனால் கருச்சிதைவு ஏற்பட்டதாக பொய் கூறிய மியான்மர் பெண் மா சூ நண்டர் டுவிக்கு 10,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

Wake Up Singapore செய்தித்தளத்தின் நிறுவனர் அரிஃபின் இஸ்கந்தர் ஷா அலி அக்பர், மருத்துவமனையில் கருச்சிதைவு ஏற்பட்டதாக பொய்யான தகவல் வெளியிட்ட காரணத்திற்காக 8,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

அவதூறு செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.