எரிபொருள் தட்டுப்பாடு!! ரத்து செய்யப்பட்ட விமான சேவைகள்!!
தென் அமெரிக்க நாடான கொலாம்பியாவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக பல விமானச் சேவைகளை விமான நிறுவனங்கள் ரத்து செய்துள்ளது.
சாவ் பாவ்லோ, சந்தியாகோ உள்ளிட்ட நகரங்களுக்கான விமானப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
கொலாம்பியாவின் Avianca தேசிய விமான நிறுவனம் அதன் 24 விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது.
மின்சாரக் கோளாற்றினால் எரிபொருள் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கொலாம்பியா தேசிய எரிபொருள் நிறுவனம் தெரிவித்தது.
இதனால் எரிபொருளை இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
தென்அமெரிக்காவின் மிகப்பெரிய விமான நிறுவனம் LATAM, மொத்தம் 36 விமானச் சேவைகளை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது.
இதன் காரணமாக விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரிக்கலாம் என்று போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Follow us on : click here