சிங்கப்பூரில் தொடர்ந்து அதிகரித்து வரும் பள்ளி பேருந்து கட்டணம்.ஒரு சில காரணங்களால் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
அதாவது,அதிகரிக்கும் வாகன உரிமச் சான்றிதழ் கட்டணம், எரிபொருள் விலை உயர்வு, ஓட்டுநர்கள் பற்றாக்குறை இது போன்ற காரணங்களால் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஒரு சில பெற்றோர்கள் கூடுதல் கட்டணத்தைச் செலுத்த முடியாத காரணத்தால், அவர்கள் பொதுப் போக்குவரத்துக்கு மாறி வருகின்றனர்.
தற்போது பேருந்து இயக்குவதற்கான செலவு அதிகரித்துள்ளதாக பள்ளியில் இருந்து பிள்ளைகளை ஏற்றி வரும் போக்குவரத்து சேவையை வழங்கும் சுந்தர சேகரன் கூறுகிறார்.
10 ஆண்டுகளுக்கு முன் எரிபொருளை நிரப்ப 60 வெள்ளி போதும் ஆனால்,தற்போது கிட்டத்தட்ட 200 வெள்ளி தேவைப்படுவதாக கூறினார்.
தற்போது காப்புறுதி,சாலை வரி, வாகன நிறுத்த கட்டணம் அனைத்தும் கூடிவிட்டது. அதேபோல் அதே பள்ளியில் சேவையாற்றும் பெரிய பேருந்து நிறுவனங்களின் நிலையும் இதேதான்.
இதனால் கட்டணத்தின் விழுக்காட்டை கூட்டி உள்ளனர்.எனினும் 5 விழுக்காடு அதிகரித்தும் அதன் செலவுகளை ஈடு கட்ட முடியவில்லை என்று கூறினார்.
தற்போது பேருந்துகளுக்கான சேவையும் குறைந்துள்ளது.
சிங்கப்பூரில் பள்ளிப் பேருந்தைப் பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கையும் மூன்றில் ஒரு பங்கு குறைந்து விட்டதாகவும் கூறினார்.
பெற்றோர்கள் பொதுப் பேருந்து வசதியானது மலிவானதாக இருக்கிறதாக கூறுகின்றனர்.
பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கு காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வேலையில்லை.
சிங்கப்பூரர்களை இந்த பணியில் சேர விடாமல் இது தடுக்கிறதாகவும் கூறினார். சிங்கப்பூரர்களாக இல்லாதவர்களை இன்னும் அதிகமானவர்கள் பேருந்தை ஓட்ட அனுமதிப்பதைப் பற்றி அரசாங்கம் பரிசீலிக்கலாம்.இவ்வாறு அரசாங்கத்திடம் பரிந்துரைக்கப்படுகிறது.