கால்பந்து மைதானத்தில் போட்டியின் போது மயங்கி விழுந்த வீரர்!!
பிரேசிலில் உள்ள மொரம்பிஸ் மைதானத்தில் கோபா லிபர்டடோர்ஸ் கால்பந்து தொடர் நேற்று நடைபெற்றது. அதன் ரவுண்ட் ஆப் 16(லெக்-2) சுற்று ஆட்டம் ஒன்றில் சாவ் பாலோ-உருகுவேயின் கிளப் நேஷனல் டி கால்பந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் 0-0 என்ற கணக்கில் ஆட்டம் முடிந்தது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் போடுவதற்காக பலப்பரீட்சை நடத்தின.
ஆட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த போது 84 வது நிமிடத்தில் கிளப் நேஷனல் டி கால்பந்து அணியின் டிபெண்டர் ஜீவான் இஸ்கியர்டோ வீரர் மைதானத்தில் மயக்கம் அடைந்து விழுந்தார்.
மைதானத்தில் சுயநினைவின்றி விழுந்த வீரரை உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து அறிவிப்பு ஒன்றை நேஷனல் டி கால்பந்து அணி வெளியிட்டுள்ளது.
ஆட்டத்தின் போது ஜீவான் இஸ்கியர்டோவுக்கு இதயத்துடிப்பு சீராக இல்லாததால் அவர் மைதானத்திலேயே மயங்கி விழுந்ததாக தெரிவித்தது.மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் கூறியது.
இச்சம்பவத்திற்கு பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியது . நேஷனல் டி கால்பந்து அணியை 2-0 என்ற செட் கணக்கில் சாவ் பாலோ தோற்கடித்து வெற்றி பெற்றது.
காலிறுதிக்கு சாவ் பாலோ அணி முன்னேறியது.
இந்த காலிறுதி போட்டி செப்டம்பர் 18-ஆம் தேதி நடைபெறும்.
Follow us on : click here