தங்கக் கட்டிகளை கடத்த முயன்ற தென்கொரியா ஆடவர் மீது குற்றச்சாட்டு...!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூருக்குப் பணம் கொண்டு வந்ததை தெரிவிக்கத் தவறியது, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்க முயன்றது உள்ளிட்ட குற்றங்களுக்காக முதியவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
தென்கொரியாவை சேர்ந்த 63 வயதான கிம் டேக் ஹூன் என்பவர் மீது ஆகஸ்ட் 23 குற்றம் சாட்டப்பட்டது.
அவர் மீது மொத்தம் 21 குற்றச்சாட்டுகள் உள்ளன.
அதில் 20,000 வெள்ளிக்கு மேல் சிங்கப்பூருக்குள் கொண்டு வந்து அதை தெரிவிக்கத் தவறியதாக 4 குற்றச்சாட்டுகள் உள்ளன.
சிங்கப்பூர் சுங்கத்துறையை ஏமாற்றியதாக 4 குற்றச்சாட்டுகள் உள்ளன.
மேலும் தளவாட நிறுவனங்களை ஏமாற்றியதாக ஒன்பது குற்றச்சாட்டுகள் அவர் மீது உள்ளன.
மீதமுள்ள குற்றச்சாட்டுகள் குற்றத்தின் மூலம் கிடைத்த வருவாயை நல்ல பணமாக முயல்வது தொடர்பானவை.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிம்மை போலீசார் கைது செய்தனர்.
சிங்கப்பூரில் வாங்கப்பட்ட தங்கக் கட்டிகளை தென் கொரியா மற்றும் ஜப்பானுக்கு கடத்தும் சதித்திட்டத்தில் கிம் ஈடுபட்டிருக்கலாம் என்ற தகவலையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
2014 மற்றும் 2017 க்கு இடையில், கிம் தென் கொரியாவிலிருந்தும் ஜப்பானில் இருந்தும் கடத்தல் மூலம் பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இறக்குமதி செய்யப்பட்ட உபகரணங்களுக்குள் அந்தப் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
அதன் மூலம் கிடைத்த பணத்தை கிம் சிங்கப்பூரில் தங்க கட்டிகளை வாங்க பயன்படுத்தியுள்ளது தெரிய வந்தது.
சிங்கப்பூரில் உள்ள 3 லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள் ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கு டிபர்ரிங் கருவிகளுடன் தங்கக் கட்டிகளையும் கடத்த முயன்றதாக கிம் மீது குற்றச்சாட்டப்பட்டது.
Follow us on : click here