Mpox தொற்று பாதிப்பு!! சிங்கப்பூரில் புதிய கட்டுப்பாடு!!

Mpox தொற்று பாதிப்பு!! சிங்கப்பூரில் புதிய கட்டுப்பாடு!!

சிங்கப்பூருக்குள் விமானம் மற்றும் கடல் வழி மூலமாக mpox தொற்று உள்ள பகுதிகளில் இருந்து வருபவர்கள் ஆகஸ்ட் 23-ஆம் தேதி(இன்று) முதல் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இது குறித்த அறிக்கை ஒன்றை நேற்றிரவு சுகாதார அமைச்சகம் வெளியிட்டது.

நில மற்றும் கடல் சோதனைச் சாவடிகளில் சோதனை நடத்தப்படும் என அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

இது பயணிகளுக்கும், ஊழியர்களுக்கும் பொருந்தும்.

மேலும் உடலின் வெப்பநிலை மற்றும் உடல்நிலை பரிசோதிக்கப்படும்.

காய்ச்சல், உடலில் தடிப்பு போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் கூடுதல் பரிசோதனைகள் செய்யப்படும்.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதார அமைச்சகம்,போக்குவரத்து அமைச்சகம் மற்றும் குடிநுழைவு சோதனைச் சாவடிகள் இணைந்து எடுத்துள்ளன.

சிங்கப்பூரில் 13 பேருக்கு mpox தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவை அதிகம் பாதிப்பு ஏற்படுத்தாத Clade இரண்டு கிருமி ரகத்தைச் சார்ந்தவை.

Clade ஒன்று கிருமி ரகம் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.சிங்கப்பூரில் இதுவரை clade ஒன்று தொற்று இருப்பதாக தென்படவில்லை.