சமூக வலைதளங்களை குறிவைத்து நடக்கும் மோசடிச் சம்பவங்கள்….!!!

சமூக வலைதளங்களை குறிவைத்து நடக்கும் மோசடிச் சம்பவங்கள்....!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மோசடி சம்பவங்கள் சமூக வலைதளங்களை குறிவைத்து நடக்கின்றன.

இதனால் Facebook,telegram,Instagram உள்ளிட்ட தளங்களை பயன்படுத்துவோர் மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்துமாறு காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஒட்டுமொத்த மோசடி வழக்குகள் சுமார் 137.5 சதவிகிதமாக பதிவாகியுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை மோசடி செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்கள் மற்றும் 50 வயதுக்குட்பட்ட பெரியவர்கள் என தெரியவந்துள்ளது.

அதில் 74.2 சதவீதம் பேர் இளைஞர்கள் என போலீசார் தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஊழல் வழக்குகள் கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 16.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

மொத்தம் 26,587 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன.

குறைந்தபட்சம் $385.6 மில்லியன் இழந்தது.

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 24.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஈ-காமர்ஸ் மோசடிகள், வேலை மோசடிகள் மற்றும் ஃபிஷிங் மோசடிகள் ஆகியவை 2024 இன் முதல் பாதியில் நடந்த பொதுவான மோசடிகளாகும்.

எனவே சமூக வலைத்தளங்களில் மோசடி வேலைகள் அதிகமாக நடைபெறுவதால் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் பயன்படுத்துமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

 

Follow us on : click here 👇👇

Instagram id : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook id : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram id : https://t.me/tamilansg