காய்கறிகளில் பூச்சி...!!! சிங்கப்பூருக்கே மீண்டும் திருப்பி விடப்பட்ட லாரி...!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இருந்து மலேசியா நோக்கிச் சென்ற காய்கறி லாரி சிங்கப்பூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
அந்த லாரியில் பூச்சிகள் நிறைந்த முட்டைக்கோஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் இருந்து துவாஸ் பாலம் வழியாக ஜொகூருக்கு லாரி நுழைந்தது.
பரிசோதிக்கப்பட்ட 216 முட்டைக்கோஸ் பெட்டிகளில் Phyllotreta எனப்படும் உயிருள்ள பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக the star வெளியிட்டுள்ளது.
அவை 2,160 கிலோகிராம் எடையும் 6,800 ரிங்கிட் (சுமார் 2,000 வெள்ளி) மதிப்பும் கொண்டவை.
மக்கிஸ் சட்டம் 2011 இன் பிரிவு 14(a) இன் கீழ், பூச்சிகள், நோய்கள் அல்லது பிற பொருட்களால் மாசுபட்ட விவசாய பொருட்களை இறக்குமதி செய்வது சட்டப்படி குற்றமாகும் என்று அவர் கூறினார்.
உணவுப் பாதுகாப்பை பாதுகாக்க மலேசியாவின் நுழைவு சோதனைச் சாவடி தொடர்ந்து கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், RM100,000 க்கு மிகாமல் அபராதம்,ஆறு ஆண்டுச் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
Follow us on : click here