சிங்கப்பூர் ஊழியரணியின் வேலைமாற்றுத் திட்டத்தின்மூலம் திறன்வளர்ச்சியும் ஊழியர் இடமாற்றமும் விமானப்போக்குவரத்துத் துறையில் முன்னணி இடம்பிடித்துள்ளன.
கிருமிப்பரவல் காலத்தில் ஆயிரக்கணக்கான வேலைகள் இல்லாமல் போனது அதற்கொரு காரணம்.
SATS எனப்படும் விமானநிலையச் சேவைகள் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப்பிரிவில் இருந்த பலருக்குக் கிருமிப்பரவல் காலத்தில் அதிக வேலையில்லை.
வேலைமாற்றுத் திட்டம் அவர்களுக்குக் கைகொடுத்தது.
திட்டத்தில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு அடுத்தபடியாக நல்ல பலன்கண்டது நிதிச்சேவைகள் துறை.
ஆரம்பகாலப் பிள்ளைப் பராமரிப்புத் துறை அதற்கடுத்த இடத்தைப் பிடித்தது.
ஹோட்டல் நிபுணத்துவத் தொழிலர்களும் அந்தத் திட்டத்தின்மூலம் அதிகப் பலன்பெற்றனர்.