Tamil Sports News Online

சிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவு பிறப்பு விகிதம் குறைவு!

சிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவு பிறப்பு விகிதம் குறைந்துள்ளது.

2020-ஆம் ஆண்டில் 1.1 ஆக இருந்தது.

2021-ஆம் ஆண்டில் விகிதம் 1.12 ஆக இருந்தது.

கடந்த 2022-ஆம் ஆண்டில் 1.05 ஆக விகிதம் இருந்தது.

சீனா பஞ்சாங்கத்தின் படி கடந்த ஆண்டு புலி ஆண்டு.

சீனர்கள் பொதுவாகவே புலி ஆண்டில் குறைவான குழந்தைகளையே பெற்றுக் கொள்ளவர் என்பதும் பிறப்பு விகிதம் குறைந்ததற்கான காரணம் என்றும் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா நேற்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

திருமணத்தைத் தள்ளிப் போடுவது,திருமணம் ஆகாதவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு,திருமணமான தம்பதிகள் குறைவான பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வது முதலியவைகளும் இதற்கு ஒரு முக்கியக் கரணங்கள் என்றும் கூறினார்.

இதேபோல் 2010-ஆம் ஆண்டிலும் புலி ஆண்டு வந்தப் போதிலும் பிறப்பு விகிதம் குறைந்ததை நினைவூட்டினார்.

விரைந்து மூற்படியும் சமூகம்,குறையும் குழந்தைப் பிறப்பு முதலியவற்றால் ஏற்படும் பாதிப்புகளைச் சிங்கப்பூர் சமாளித்து வருவதாகவும் கூறினார்.