சிங்கப்பூர் குடியுரிமையை பெற்ற 177 பேர்...!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் குடியுரிமை வழங்கும் நிகழ்வானது இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் பெர்பார்மிங் ஆர்ட்ஸ் தியேட்டரில் மக்கள் சங்கம் சார்பாக நடத்தப்பட்டது.
வருடாந்திர தேசிய குடியுரிமை விழாவில் 177 பேர் புதிய குடியுரிமைச் சான்றிதழை பெற்றனர்.
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) விழாவில் பேசிய வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், புதிய குடிமக்களை வரவேற்று, சிங்கப்பூரின் பொதுவான காரணங்களான பன்முக கலாச்சாரம் மற்றும் நல்லிணக்கம் உள்ளிட்டவற்றில் பங்களிக்க ஊக்குவித்தார்.
குடியுரிமை பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் புதிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
கடந்த ஆண்டு சுமார் 23,500 பேருக்கு சிங்கப்பூர் குடியுரிமை வழங்கப்பட்டது.
சிங்கப்பூர் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சிங்கப்பூர் PR ஆக இருந்து 21 வயது மற்றும் அதற்கு மேல் இருந்தால் தகுதியுடையவர்களாக கருதப்படுவர்.
மேலும் தகுதி பற்றிய விவரங்களுக்கு, குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் (ICA)வலைதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
Follow us on : click here