விளையாட்டு வசதிகளை மேம்படுத்தும் முயற்சியில் சிங்கப்பூர் அரசு...!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் அரசாங்கம் விளையாட்டுக் கலாச்சாரத்தை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அந்தவகையில் பிரதமர் வோங்கின் தேசிய தினப் பேரணி உரையில் பல்வேறு விளையாட்டு திட்டங்கள் குறித்து பேசப்பட்டது.அதன் ஒரு பகுதியாக சிங்கப்பூர் விளையாட்டு பள்ளி ஆனது உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் இருந்து காலாங்கிற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவித்தார்.
இந்த இடமாற்றம் ‘Kallang Alive’ முயற்சியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் விளையாட்டு பள்ளி கடந்த ஏப்ரலில் தனது இருபதாவது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது.
உட்லண்ட்ஸ் டிரைவில் அமைந்துள்ள அந்த விளையாட்டு பள்ளி சுமார் 7 ஹெக்டர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அதில் உள்ள உட்புற விளையாட்டு அரங்கானது 700 பேர் அமரக்கூடிய வகையில் இருந்தது.
Kallang Alive பகுதியில் தற்போது கலாங் கால்பந்து மையம், கலோங் டென் மையம், தேசிய அரங்கம், உள்விளையாட்டு அரங்கம் மற்றும் OCPC நீர்வாழ் மையம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
இந்த புதிய உட்புற வசதிக்கான திட்டங்கள் மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,18,000 பேர் அமரக்கூடிய வசதி அதில் இருக்கும் என்று பிரதமர் வோங் தனது உரையில் தெரிவித்தார்.
விளையாட்டுத் துறைகளில் இம்மாதிரியான புதிய வசதிகள் ஏற்படுத்தி தருவதினால் விளையாட்டு வீரர்கள் ஊக்கத்துடன் செயல்படுவதோடு மட்டுமல்லாமல் அவர்களது கனவை நினைவாக்கும் முயற்சியிலும் ஈடுபடுவர் என்று பிரதமர்.வோங் தெரிவித்தார்.
Follow us on : click here