தந்தையர் விடுப்பு திட்டம்…!! குழந்தை பராமரிப்பில் ஈடுபடும் தந்தையர்கள்..!!!

தந்தையர் விடுப்பு திட்டம்...!! குழந்தை பராமரிப்பில் ஈடுபடும் தந்தையர்கள்..!!!

சிங்கப்பூர்: இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வீட்டையும் கவனித்துக் கொண்டு வேலைக்கும் செல்கின்றனர். இந்நிலையில் வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்ள போதுமான நேரம் இன்றி சிரமப்படுகின்றனர்.

அவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சிங்கப்பூர் அரசு தந்தையர் விடுப்பு திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய தினக் கூட்ட உரையின்போது பிரதமர் திரு. லாரன்ஸ் வோங் தந்தையர் விடுப்புக்கான திட்டங்கள் குறித்து அறிவித்திருந்தார்.

அதில் குழந்தையை வளர்ப்பதில் தாய்,தந்தை இருவருக்கும் சமபங்குண்டு. வேலைக்குச் செல்லும் பெண்கள் வீட்டையும் கவனித்து குழந்தைகளையும் பராமரிப்பது என்பது சிரமம். எனவே குழந்தை வளர்ப்பில் தந்தையரும் ஈடுபட வேண்டும் என்று கூறினார்.

தற்போது உள்ள மகப்பேறு திட்டத்தில் தாய்க்கு 16 வார விடுப்பும், தந்தைக்கு நான்கு வார விடுப்பும் அரசாங்கத்தால் சம்பளத்துடன் வழங்கப்படுகிறது.

அதன் அடிப்படையில் தந்தையர்கள் இரண்டு வார விடுப்பை தன்னார்வ அடிப்படையில் எடுக்கும் முறை இந்த ஆண்டு ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஏப்ரல் 1, 2025 முதல் அந்த இரண்டு வார விடுமுறையைப் பயன்படுத்துவது கட்டாயமாகும்.

புதிய முறை ஏப்ரல் 1, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த குழந்தைகளின் தந்தைகளுக்குப் பொருந்தும்.

அன்றிலிருந்து முதலாளிகள் தங்கள் ஊழியர்களுக்கு நான்கு வார விடுப்பை வழங்குவது கட்டாயமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, தந்தையர் விடுப்பு எடுக்கும் ஆண்களின் விகிதம் சுமார் 25 சதவீதத்தில் இருந்து 50 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தது.

இத்திட்டத்தை வரவேற்ற காங்கிரசின் உதவித் தலைமைச் செயலாளர் திருவாட்டி இயோ வான் லிங், குழந்தை வளர்ப்பதில் தாய்,தந்தையர் இருவரின் பங்கும் முக்கியமானது என்பதை பிரதிபலிக்கும் வகையில் திட்டம் அமைந்துள்ளதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

Follow us on : click here ⬇️