முதியவருக்கு சேவை வழங்க வந்த மூதாட்டி…!!! இறுதியில் நகையை திருடி விட்டு ஓட்டம்…!!!

முதியவருக்கு சேவை வழங்க வந்த மூதாட்டி...!!! இறுதியில் நகையை திருடி விட்டு ஓட்டம்...!!!

சிங்கப்பூர்: கேலாங்கில் உள்ள ஹோட்டலில் குளித்துக் கொண்டிருந்த 76 வயது முதியவரின் தங்கச் சங்கிலியைத் திருடியதாக மூதாட்டி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனால் சென் ரோங்குவா என்ற 63 வயது மூதாட்டிக்கு 5,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குற்றம் செய்ததாக கருதப்படும் மூதாட்டி கடந்த மாதம் 31ஆம் தேதி (ஜூலை 2024) கேலாங்கில் பாதிக்கப்பட்ட ஆணைச் சந்தித்தார்.

பின்னர் அந்த மூதாட்டி 40 வெள்ளிக்கு முதியவருக்கு உடல் பிடிப்புச் சேவை வழங்க ஒப்புக்கொண்டார்.

அதன் பிறகு இருவரும் ஹோட்டலுக்கு சென்றனர்.

அந்த நபர் குளிக்கச் சென்றபோது 5,000 வெள்ளி மதிப்புள்ள தங்கச் சங்கிலியைத் திருடிவிட்டு சென் ஹோட்டலை விட்டு வெளியேறினார்.

ஹோட்டல் அறையில் இருந்து சங்கிலி திருடப்பட்டதாக அந்த நபர் போலீசாரிடம் புகார் அளித்தார்.

சங்கிலியை திருடிவிட்டு ஹாங்காங் செல்ல திட்டமிட்டிருந்த மூதாட்டியை அதே நாள் மாலை 6.40 மணிக்கு போலீசார் கேலாங்கில் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து தங்கச் சங்கிலியை மீட்டு போலீசார் பாதிக்கப்பட்ட நபரிடம் கொடுத்தனர்.

முதலில் நீதிமன்றத்தில் குற்றத்தை மறுத்த சென், இறுதியில் அதை ஒப்புக்கொண்டார்.

அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில் சென் 2 வாரங்கள் வரை சிறையில் இருக்க நேரிடலாம்.

சிங்கப்பூரில் திருடுவது தீவிர குற்றமாக கருதப்படுகிறது.

திருட்டு வேலையில் ஈடுபட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.