கடந்த 5 மாதங்களாக சரிவைக் கண்ட சிங்கப்பூர் ஏற்றுமதி!! ஜூலை மாதம் வளர்ச்சி!!
சிங்கப்பூர்: ஏற்றுமதியில்
பெரும் மாற்றத்தை கண்டுள்ளது சிங்கப்பூர்.
கடந்த ஐந்து மாத காலங்களாக சரிவைக் கண்ட சிங்கப்பூர் வர்த்தகம் ஜூலை மாதம் ஏற்றத்தைக் கண்டுள்ளது.
அண்டை நாடுகளான அமெரிக்கா,மலேசியா,சீனா ஆகிய நாடுகளுக்கு சிங்கப்பூரின் ஏற்றுமதி
கணிசமாக உயர்ந்துள்ளது.
ஜீன் மாதத்தில் மிகப்பெரிய சரிவை கண்ட எண்ணெய் அல்லாத பொருட்களின் ஏற்றுமதி ஜூலை மாதத்தில் 12 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.
எலக்ட்ரிகல்,எலக்ட்ரிகல் அல்லாத பொருட்கள் இரண்டிலும் வளர்ச்சி கண்டுள்ளது.
சிங்கப்பூரின் வர்த்தகம் குறித்து ஜூலை மாதம் 1.2 விழுக்காடு வளர்ச்சி அடையும் என்று Bloomberg கூறியிருந்தது.
எண்ணெய் அல்லாத பொருட்களின் ஏற்றுமதி ஜூலை மாதம் முதல் 15.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
முக்கிய ஏற்றுமதி பொருட்களிலும் வளர்ச்சி அடைந்து ள்ளது.
பத்து பெரிய சந்தைகளிலும் ஏற்றம் கண்டுள்ளது.
இந்த ஆண்டு முழுவதும் ஏற்றுமதிக்கு சாதகமாக இருக்கும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
Follow us on : click here