பொது இடத்தில் தகராறில் ஈடுபட்டதாக 5 இந்தோனேசிய பெண்கள் மீது குற்றச்சாட்டு!!!

பொது இடத்தில் தகராறில் ஈடுபட்டதாக 5 இந்தோனேசிய பெண்கள் மீது குற்றச்சாட்டு!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பயா லேபார் MRT நிலையத்தில் தகராறில் ஈடுபட்ட 5 பெண்கள் மீது (ஆகஸ்ட் 15) அன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்த வீடியோ பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

அதில், பெண்கள் ஒருவரையொருவர் சத்தம் போட்டு தாக்குவது பதிவாகி இருந்தது.

அவர்கள் அனைவரும் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள்.

தகராறில் ஈடுபட்டதாக கருதப்படும் ஸ்ரீயானி – 46 வயது, மெசரோ – 35 வயது ,சுலாஸ்திரி – 44 வயது, நிட்டா விடியா ரஹாயு- 34 வயது ,சித்தி ருக்காயா குஸ்னி- 47 வயது இவர்கள் அனைவரும் மே 19 ஆம் தேதி மதியம் கலவரத்தில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சித்தி, சுலாஸ்திரி,நிட்டா ஆகியோருக்கும் ஸ்ரீயானி என்பவருக்கும் ஏற்கனவே பிரச்சனை இருந்ததாக காவல்துறை அறிக்கை கூறுகிறது.

இதில் மெசரோ ஸ்ரீயானியின் பக்கம் நின்றார்.

இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அன்றைய தினம் பிற்பகல் 2.55 மணியளவில் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஐவரில் நான்கு பேரை மே 19ஆம் தேதி கைது செய்தனர்.

ஐந்தாவது நபரான சித்தி கைதாகாமல் இருந்த நிலையில் தற்போது அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டு கைதாகி உள்ளார்.

Follow us on : click here ⬇️