விண்வெளியில் சிக்கி தவிக்கும் விண்வெளி வீரர்கள்!! பூமிக்கு கொண்டு வர முயலும் NASA!!

விண்வெளியில் சிக்கி தவிக்கும் விண்வெளி வீரர்கள்!! பூமிக்கு கொண்டு வர முயலும் NASA!!

கடந்த ஜீன் மாதம் 5 – ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ்,பேரி வில்மோர் ஆகிய இரு விண்வெளி வீரர்கள் விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு பூமியிலிருந்து புறப்பட்டனர்.

அவர்கள் 8 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டு விண்வெளியில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பூமிக்கு திரும்ப முடியாமல் அவர்கள் இருவரும் இரண்டு மாதத்திற்கும் மேலாக விண்வெளியில் சிக்கி தவிக்கின்றனர்.

விண்வெளியில் சிக்கி தவிக்கும் விண்வெளி வீரர்களை பூமிக்கு கொண்டு வர அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான NASA அதற்கான முயற்சிகளை ஆராய்ந்து வருகிறது.

SpaceX இன் Crew Dragon விண்கலத்தின் உதவியுடன் விண்வெளியில் சிக்கி தவிக்கும் விண்வெளி வீரர்களை 2025-ஆம் ஆண்டு தொடக்கத்திற்குள் பூமிக்கு கொண்டு வர NASA முயற்சி செய்து வருகிறது.