ஸ்கூட் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு..!!!
சிங்கப்பூர்: தென்கொரியாவில் இருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த Scoot விமானம் ஆகஸ்ட் 13ஆம் தேதி சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக தைவானுக்கு திருப்பிவிடப்பட்டது.
ஜெஜு தீவில் இருந்து ஸ்கூட் விமானம் TR813 கிட்டத்தட்ட ஆறு மணி நேர தாமதத்திற்குப் பிறகு, உள்ளூர் நேரப்படி (ஆகஸ்ட் 13) காலை 10 மணியளவில் விமானம் ஜெஜூவிலிருந்து புறப்பட்டது.
சிங்கப்பூர் நேரப்படி ஸ்கூட் விமானம் மதியம் 2 மணிக்கு சாங்கி விமான நிலையத்துக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் தைவானுக்கு திருப்பிவிடப்பட்டது.
மேலும் விமானம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தைவானின் தாயுவான் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
கேள்விகளுக்கு பதிலளித்த ஸ்கூட்டின் செய்தித் தொடர்பாளர்,விமானம் TR813 விமானத்தில் 86 நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதாக கூறினார்.
விமானத்தில் இருந்த 173 பயணிகள் மற்றும் ஏழு பணியாளர்களுடன் விமானம் தைவான் தலைநகரில் காலை 10.27 மணிக்கு தரையிறங்கியது. பயணிகள் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தைவான் தாயுவான் சர்வதேச விமான நிலையத்தில் உணவு வவுச்சர்கள் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.
பின்னர், சிங்கப்பூர் நேரப்படி மாலை 3 மணியளவில் தைவானில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் புறப்பட்டது.
மேலும் Scoot நிறுவனம், பயணிகளிடம் இடையூறு மற்றும் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டது.மேலும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்குவதாகவும், தேவைப்படும் பொழுது அவர்களுக்கு உதவி வழங்குவதாகவும் தெரிவித்தது.
Follow us on : click here