கருணை விடுமுறையைப் பெற போலி இறப்பு சான்றிதழை சமர்ப்பித்த ஆடவர்…!!!

கருணை விடுமுறையைப் பெற போலி இறப்பு சான்றிதழை சமர்ப்பித்த ஆடவர்...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரைச் சேர்ந்த நவ்வார் ஐசார் சர்டாலி என்ற நபர் கருணை விடுமுறையைப் பெறுவதற்காக போலி இறப்புச் சான்றிதழை தயாரித்து அதை தான் பணிபுரியும் நிறுவனத்தில் சமர்ப்பித்துள்ளார்.

நிறுவனம் போலி இறப்பு சான்றிதழ் தயாரித்து சமர்ப்பித்ததாக நவ்வார் மீது குற்றம் சாட்டியது.

இதனால் 30 வயதான நவ்வார் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

குற்றப்பத்திரிகையின்படி, அவர் அக்டோபர் 7, 2022 தேதிக்கு முன்னர் போலி இறப்பு சான்றிதழை தயாரித்ததாக கூறப்படுகிறது.

நவ்வார் தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக் கொள்கிறார்.

மேலும் தனக்காக வாதாடுவதற்காக ஒரு வழக்கறிஞரை நியமிப்பது குறித்தும் ஆலோசித்து வருவதாக கூறியுள்ளார்.

போலி இறப்புச் சான்றிதழ் தயாரித்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒருவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது 10,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Follow us on : click here ⬇️