பதவியிலிருந்து நீக்கப்பட்டார் தாய்லாந்து பிரதமர்!!

பதவியிலிருந்து நீக்கப்பட்டார் தாய்லாந்து பிரதமர்!!

தாய்லாந்து சட்டத்தின்கீழ் ஒருமுறை குற்றவாளி என நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டவர்கள் அரசாங்க பதவிகளுக்கு தகுதியற்றவர்கள்.

தாய்லந்து நாட்டில் கடந்த 16 ஆண்டுகளில் நீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் அரசியல் பதவியில் இருப்பவர்களை பதவி நீக்கம் செய்யப்படுவது இது முதல்முறை அல்ல.

தாய்லாந்து அரசியலமைப்பு சட்டத்தின்படி பிரதமர் செட்டா தவீசின் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.ஆகஸ்ட் 14-ஆம் தேதி (நேற்று) நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பிச்சிட் சியூன்பன் என்பவரை கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் அலுவலக அமைச்சராக தவீசின் நியமித்தார்.

லஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் 2008-ஆம் ஆண்டு பிச்சிட் சியூன்பன்னுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தாய்லந்து பிரதமர்
செட்டா தவீசின் தகுதியற்ற ஒருவரை அமைச்சரவை உறுப்பினராக நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.

செட்டா தவீசின் ஒரு வருடத்திற்கு குறைவான காலம் பொறுப்பில் இருந்து பதவி விலகி இருந்து நீக்கப்பட்டதால் புதிய பிரதமரை நாடாளுமன்றம் ஒன்று கூடி தேர்ந்தெடுக்க வேண்டும்.

Follow us on : click here ⬇️